அம்பாறை சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு - ஒருவர் கைது!
அம்பாறையில் மோட்டார் சைக்கிளைத் திருடிய சந்தேகத்தில் ஒருவரை, சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்மாந்துறைப் பகுதியில், கடந்த 14ம் திகதி 8 இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டுள்ளதாக, பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டது.


முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் புலன் விசாரணையில் ஈடுபட்டனர்.


அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து மோட்டார் பைக்கிளை நேற்றைய தினம் மீட்ட பொலிஸார், சந்தேக நபரொருரையும் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை