மட்டக்களப்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை பார்வையிட்ட கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான்




கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மற்றும் வர்த்தக வாணிப இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள சித்தாண்டி விநாயகர் கிராம அலைமகள் வித்தியாலயம் மற்றும் வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம் ஆகிய இடைத்தங்கல் முகாம்களுக்கே இருவரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதோடு இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்
மேலும், இடைத்தங்கல் முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை உடன் தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.




தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், ஆளுனர் மற்றும் இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், ஏறாவூர்பற்று பிரதேச சபை செயளாலர் வ.பற்குணன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர், அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.


புதியது பழையவை