தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப தை பிறந்தவுடனேயே சுப நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிடும்.

தை மாத ஆரம்பத்திலேயே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கம் தமிழர் மரபில் உண்டு.

சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. இதற்கமைய நாளைய (15-01-2024)தினம் தமிழர்களால் தைபொங்கல் கொண்டாடப்படவுள்ளது.

மலரவிருக்கும் தைத்திருநாள்: சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள்

மலரவிருக்கும் தைத்திருநாள்

சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள்

தை முதல் நாள்
அந்த வகையில் சூரியபகவான் மகர ராசிக்குள் பெயர்ச்சியாகும் தை முதல் நாளை சூரியனை வழிபட உகந்த நாளாகக் கொண்டாடுகிறோம்.


விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பவர் சூரிய பகவான் என்பதற்கிணங்க சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடாப்படுகின்றது.

பொங்கல் வழிபாடு என்பது ஒரு நாள் வழிபாடு மட்டுமல்ல. பொங்கலுக்கு முன்தினமான மார்கழி மாதத்தின் கடைசி நாளும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நம்பிக்கைக்கமைய இது கொண்டாடப்படுகின்றது.


பொங்கலன்று செய்ய வேண்டியவை
பொங்கல் பண்டிகை அன்று சூரியனை வணங்கிப் பொங்கல் வைத்து கரும்பு, பழங்கள், வெற்றிலை பாக்கு ஆகியன வைத்து வழிபட வேண்டும்.


சூரிய ஒளிபடும் ஏதேனும் ஓரிடத்தில் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் சிறப்புக்குரியது. பூஜை செய்யும் இடத்தில் சந்திர, சூரியர்கள் கோலம் இட்டுக்கொள்ள வேண்டும்.

பொங்கல் பானையை நடுவே வைத்து சூரியனுக்கு தீபாராதனை காட்டிப்பின் நிவேதனம் செய்ய வேண்டும்.

பொதுவாக சர்க்கரைப் பொங்கல் செய்வதுவே வழக்கம். சில வீடுகளில் வெண்பொங்கலும் சேர்த்து செய்வார்கள்.

பொங்கல் வைக்க உகந்த நேரம்
நாளையதினம் எந்த தினத்தில் பொங்கல் வைக்கலாம் என பார்க்கலாம்.


நாளை (15-01-2024)காலை 07.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலமும், 10.30 முதல் 12 வரை எமகண்டமும் உள்ளதால் அதை தவிர்த்து, மற்றைய நேரத்தில் வைக்கலாம். காலை 06.30 முதல் 07.30 வரை அல்லது காலை 09.30 முதல் 10.30 வரை பொங்கல் வைக்கலாம்.

அடுத்த நாள் (ஜனவரி 16) காலை 11 மணி முதல் பகல் 01 மணி வரை மாட்டுப் பொங்கல் வைக்கலாம். இவ்வாறு பொங்கல் வைப்பதன் மூலம் சூரியனின் அருளும், செல்வ செழிப்பும் கிடைக்கும்.
புதியது பழையவை