உகந்தை முருகன் ஆலயத்தில் தைப்பூச வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன
அம்பாறை மாவட்டத்தில் வரலாற்றுப்புகழ்பெற்றபழமை வாய்ந்த உகந்தை முருகன் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு பாற்குடபவனி
இடம்பெற்றது.

பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து வருகைதந்த அதிகளவான பக்தர்கள் பாற்குடங்களை ஏந்திவாறுஆலயத்தை சென்றடைந்தனர்.

முருகப்பெருமானுக்கான பூஜையினை தொடர்ந்து பாலாபிசேகம் மற்றும் அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராமக்குருக்கள் பூஜை வழிபாடுகளை நடாத்திவைத்தார்.

புதியது பழையவை