மட்டக்களப்பு ஆனைகட்டியவெளி பலாச்சோலை பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி சேதம்

மட்டக்களப்பு போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் ஆனைகட்டியவெளி பலாச்சோலை ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி மற்றும் பிரதான பாலத்தின் இருமருங்கும், வெள்ளத்தினால் பாரிய சேதமடைந்துள்ளன.


வீதி சேதமடைந்ததால் அப் பகுதிக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன்,நேற்று(28) கள விஜயமொன்றை மேற்கொண்டு, நிலைமைகளை அவதானித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வீதிப் புனரமைப்புத் தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர், வீதியை விரைந்து புனரமைப்புச் செய்யுமாறு பணிப்புரை விடுத்தார்.
புதியது பழையவை