இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நற்செய்தி!




அஸ்வெசும கொடுப்பனவு மூலம் பயனடையும் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் கடினமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஸ்டேட் வங்கியின் பிரதிநிதிகளுடன் காப்புறுதி திட்டத்தை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக நிதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இதனைக் கூறியுள்ளார்.


20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் தற்போது இதன் மூலம் 14 இலட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும், பெறப்பட்ட 11 லட்சத்திற்கும் அதிகமான முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளில் கிட்டத்தட்ட 60% பரிசீலிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 31 க்கு முன்னர் பணிகள் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரணத்திற்கான புதிய விண்ணப்பங்கள் ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும், இன்னும் 4 இலட்சம் பேர் நலன்புரிச் செயற்பாட்டில் உள்வாங்கப்படுவார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை