கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள பொங்கல் விழா- மட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்றது
கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் இணைந்து நடாத்திய மாபெரும் பொங்கல் விழா
மட்டக்களப்பு கொம்மாதுறையில்(09-01-2024) சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளூநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ், பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அடைமழைக்கும் மத்தியிலும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயத்தில் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்
கே.மதிவண்ணன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் பிரதேசசபைகளின் செயலாளர்கள்,கணக்காளர்கள்,மாநகரசபை,நகரசபைகளின் செயலாளர்கள்,பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளும் பொங்கல் பானை வைத்து பொங்கல்கள் செய்து வழிபாடுகளை முன்னெடுத்திருந்ததோடு, கலை நிகழ்வுகளும் இடம்பெற்றனபுதியது பழையவை