தமிழரசுக்கட்சியை பக்குவமாக வழிநடத்தக்கூடிய தலைவர் சிறிதரன் - இரா.சம்பந்தன் தெரிவித்தார்




இலங்கைத்தமிழரசுகட்சி தலைவராக பக்குவமாக தமிழ் மக்களை கூட்டிணைத்துக்கொண்டு வழிநடத்தக்கூடிய தலைவர் சிவஞானம் சிறிதரனே அவருக்கே எனது முழு ஆதரவும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும், திருகோணமலை எம் பியுமான இரா .சம்பந்தன் நேற்று(20-01-2024) தெரிவித்தார்.

தமிழ்சுகட்சி தலைவர் பதவிக்காக இன்று(21-01-2024) திருகோணமலையில் உங்கள் மாவட்டத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பில் உங்கள் ஆதரவு யாருக்கு என ஊடகவியலாளர் அவரின் கொழும்பு இல்லத்திற்கு சென்று நேரடியாக கேட்டபோது இதனை கூறினார் அது தொடர்பாக மேலும் அவர் கருத்து கூறுகையில்.

தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கு என்றுமில்லாத வகையில் மூன்றுபேர் போட்டியிடுகிறார்கள் இந்த நிலமை கட்சிக்கு உகந்தது இல்லை என்பதை கடந்த (10), ம் திகதி என்னை சந்திக்க வந்த சிறிதரன், சுமந்திரன் யோகேஷ்வரன் மூன்று பேருடனும் கூறினேன் அவர்கள் பேசி ஒருவருக்கு விட்டுக்கொடுப்பதா கூறினார்கள் ஆனால் அந்தவிதமாக அவர்கள் செய்யவில்லை இருந்தபோதும் யோகேஷ்வரன் சிறிதரனுக்கு விட்டுக்கொடுப்பேன் என என்னிடம் கூறியிருந்தார் அது நல்ல விடயம்.
மற்றப்படி ஏனய சிறிதரன் சுமந்திரன் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுக்கவில்லை என்பது வருந்த தக்க சம்பவம். இருந்தபோதும் பொதுச்சபையில் உள்ளவர்கள் அவர்களுக்கு பொருத்தமான ஒருவரை வாக்களித்து தலைவராக தெரிவார்கள்.அது அவர்களின் உரிமை.

என்னைப்பொறுத்தவரையில் சிறிதரன் தமிழ் மக்களை கூட்டிணைத்து கருமங்களை வடக்கு கிழக்கு முழுவதும் செய்யக்கூடிய பக்குவம் அவருக்கு இருக்கிறது தமிழ் மக்களை கொள்கைரீதியாக அரவணைக்கும் பக்குவமும் உள்ளது அதை அவருடைய செயல்பாடுகளில் இருந்து அவதானித்துள்ளேன். இன் நிலையில் சிறிதரனே தலைவராக வரவேண்டும் என நான் நினைக்கிறேன் இருந்தபோதும் எனக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் இல்லாதபோதும்
தமிழரசுகட்சி் பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் நின்று சிறிதரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும் நிலைப்பாடும் என்றார்.
புதியது பழையவை