இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவரும் ,பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சின்னப்பு மூத்ததம்பி இராசமாணிக்கம் ஐயாவின் நூற்றுப்பதினொராவது (111) பிறந்த தினமாகும்.
இன்று (20-01-2024)மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினரால் மாலை அணிவிக்கப்பட்டது.
அன்னார் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பட்டிருப்பு தொகுதி மக்களுக்கு பல சேவைகளை செய்து வந்தவர்.
குறிப்பாக கல்லோயா குடியேற்ற திட்டத்தின் முன்னொடியாக செயற்பட்ட பெருந்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.