தமிழ் தலைவர்கள் ஓடாத குதிரைக்கே பந்தயம் கட்டுகின்றனர்-இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்”ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டும் செயற்பாட்டையே தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் செய்துவருவதாக” இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தே போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஜனாதிபதித்  தேர்தலுக்கும், நாடாளுமன்றத்  தேர்தலுக்கும் இன்னமும் காலங்கள் இருக்கின்றன. இது  தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எது விதமான தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

தமிழ் வேட்பாளரை நிறுத்தி நாங்கள் ஜனாதிபதியாக அவரை கொண்டு வர முடியுமா என்பதனை சிந்திக்க வேண்டும். சில நேரங்களில் எமது தமிழ் தரப்புகள் விடுகின்ற பிழைகள் என்ன என்றால் யார் ஒரு ஜனாதிபதியின் தேர்தலில் தோற்பாரோ அவருக்கு ஆதரிப்பை வழங்குவது . அதாவது ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டுவது போன்று அவ்வாறானவர்களுக்கு ஆதரவினை வழங்கி கடைசியில் வெற்றி பெறும் ஜனாதிபதியுடன் பேசி எதையும் செய்து கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு செல்வது வழமை.

ஆனால் தமிழ் தரப்புகள் பல்வேறுபட்ட கட்சிகள் இருந்தாலும் பல கொள்கை கோட்பாடுகளோடு பயணித்தாலும் இந்த நாட்டில் எப்படி பார்த்தாலும் சிங்கள மக்களை மையப்படுத்திய ஒருவர்தான் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் தான் ஜனாதிபதியாக வர போகின்றார் ஆகவே இந்த நேரத்தில் தான் தமிழ் தலைமைகள் மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டும்.

ஜனாதிபதியாக வர சாத்தியமாக உள்ள ஒருவரோடு நாங்கள் பேச வேண்டும் ஒருமித்த குரலிலே எல்லோரும் பேசி எமது மக்களுக்கு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளாக இருக்கலாம் அபிவிருத்தி சார்ந்த விடயங்களாக இருக்கலாம் உடனடியாக ஆற்ற வேண்டிய விடயங்களாக இருக்கலாம் நீண்ட காலத்தில் செய்து முடிக்க வேண்டிய விடயங்களாக இருக்கலாம் ஒவ்வாறாக இருந்தாலும் இது தொடர்பாக நாங்கள் தீர்க்கமாக கலந்த ஆலோசித்து அதில் ஒரு இணக்கப்பாட்டை எட்டி அதன் பிற்பாடு நாங்கள் அவருக்கு ஆதரவு வழங்கி எங்களது மக்கள் நிழல் சார்ந்த விடயங்களை நாங்கள் செய்து சாதித்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை