லிட்ரோ கேஸ் விலை இன்று முதல் அதிகரிப்பு!





இன்று (01-01-2023)முதல் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும்.

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.
புதியது பழையவை