தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று (10-02-2024மிக கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் , விழாவின் நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா அவர்களது தலைமையிலும் இடம்பெற்றிருந்தது.பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வு
பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் விஷேட பேச்சாளராக அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.


முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் , இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூண்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டர்.நாளை (11-02-2024)நான்காவது ,ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை