நாட்டை வந்தடைந்தார் மாவை - தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் இழுபறிதமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பலாலி விமானநிலையம் ஊடாக மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

சிங்கப்பூருக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவர் இன்றையதினம்(10-02-2024) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

எனினும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமானது நாளை நடைபெறாது என கட்சியின் உள்ளக வட்டாரங்களில் இருந்து அறியக்கிடைத்துள்ளது.


இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் குகதாசன் மற்றும் சிறீநேசன் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாட்டுடைய பேச்சுவார்த்தையானது கட்சியின் உயர்மட்ட தலைமைகளினால் இடம்பெற்று வரும் நிலையில் கட்சியின் பொதுச்சபை கூட்டமானது நாளை இடம்பெறாது என கூறப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த (28-01-2024 )ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக மாநாடானது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், பொதுச் செயலாளர் தெரிவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மற்றும் குகதாசன் ஆகியோருக்கு இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.


இதன்போது அதிக வாக்குகளைப் பெற்று குகதாசன் தெரிவு செய்யப்பட்டிருந்த போதும் அதன் பின்னர் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பொதுச் செயலாளர் தெரிவு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேற்படி கூட்டத்தில் சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருடன் கலந்துகொண்டிருந்த சுமந்திரன் எம்.பி. இந்த விவகாரத்தில் இணக்கப்பாடு ஒன்றும் எட்டப்படாத நிலையில் கூட்டத்தை விட்டு வெளியேறியிருந்தார்.இந்நிலையில், கட்சியின் தலைமைப் பொறுப்பை தாம் இன்னுமே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், கட்சித் தலைவராக மாவை சேனாதிராஜாவே தொடர்கின்றார் என்றும் சிறீதரன் அறிவித்திருந்தார்.

இரண்டு தரப்புகளுக்கு இடையிலும் கொதிநிலை நிலவுகின்றது.

 வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முடிவு எடுக்க முடியாத நிலைமை உள்ளது. எல்லோரையும் சமாளித்து, அரவணைத்து, ஓர் இணக்கமான முடிவைக் காண வேண்டி இருப்பதால் சம்பந்தப்பட்ட தரப்புகளோடு நான் நேரடியாகப் பேசவிருக்கின்றேன்.


அதற்காக சற்றுக் காலம் இந்த விடயத்தில் முடிவெடுப்பதைத் தள்ளிப் போடத் தீர்மானித்துள்ளோம்.

பொதுச்செயலாளர் பதவி விடயத்தில்தான் இழுபறி நீடிக்கின்றது. அதுவும் திருகோணமலை - மட்டக்களப்புத் தரப்புகளுக்கு இடையிலான சிக்கலாக உள்ளது. இருதரப்புகளும் விட்டுக் கொடுத்து, பொதுச்செயலாளர் பதவியைக் கால அளவீட்டில் பங்கிட்டு, ஏதேனும் இணக்கத்திற்கு வர முடியுமா என்றும் பார்க்கின்றோம்.


இப்பிரச்சினைக்குத் தீர்வு காண எங்களுக்குச் சற்று கால அவவாசம் தேவைப்படுகின்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்
தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்
சிங்கப்பூர் விஜயம்
மாவை சேனாதிராஜா அடுத்து வரும் நாள்களில் சிங்கப்பூர் செல்கின்றார். அவர் பெப்ரவரி 10ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்புவார்.


அதன் பின்னர் இப்பிரச்சினை பற்றி ஆராய்ந்து ஒரு முடிவெடுப்போம். அதுவரை தற்போது உள்ள நிலைமை அப்படியே தொடரும்.''என சிறீதரன் எம்.பி. மேலும் கூறியிருந்தார்.

இதன்படி இன்றைய தினம் மாவை சேனாதிராஜா நாடு திரும்பியுள்ள நிலையில், நாளை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதியது பழையவை