மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 19ம் ஆண்டு நினைவு
மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு தமிழ்தேசியக்கூட்டமைப்பு அம்பாறைமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.!

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், 2005 பெப்ரவரி 7 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ. கௌசல்யனுடன் சந்திரநேரு பயணம் செய்த போது இவர்கள் சென்ற வாகனம் பொலன்னறுவை மாவட்டத்தில் வெலிகந்தயில் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுவால் தாக்குதலுக்குள்ளானது.

அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன், மற்றும் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்), செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி), விதிமாறன் (சிவபாதம் மதன்) ஆகிய மூன்று விடுதலைப் புலிகள், வாகனசாரதி விவேகானந்தமூர்த்தி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

படுகாயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேரு அடுத்த நாள் பெப்ரவரி 8 காலையில் உயிரிழந்தார்.

புதியது பழையவை