அம்பாறை திருக்கோவில் உடும்பன்குளம் படுகொலையின் 38வது நினைவுதினம்அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட உடும்பன்குளம் தமிழர் படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று(19-02-2024)
உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது.

உடும்பன்குளம் படுகொலை நினைவேந்தல் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டாளர் இராஜகுமார் பிரகாஷின் தலைமையில் தாண்டியடி நேருபுரம் சாய்நிலைய மண்டபத்தில்
நினைவேந்தல் இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

1986ம் ஆண்டு உடும்பன்குளப் படுகொலை நிகழ்த்தப்பட்டதோடு, உயிரிழந்தவர்கள் வைக்கோல் போரில் போட்டு எரிக்கப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை