மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஐஸ்டினா முரளிதரன் தலைமையில், நாட்டின் 76வது சுதந்திர
தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
தேசியக் கொடியை மாவட்டச் செயலாளர் ஏற்றிய பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர் நீர்த்தவர்களுக்கு மௌன அஞ்சலியும்
செலுத்தப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கு, மூலிகைச் செடிகளும் வழங்கப்பட்டன.
76வது சுதந்திர தின நிகழ்வு அம்பாறை நகரத்தில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது.
பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதத்தலைவர்களின் ஆசியுரைகள் நடைபெற்று அரசாங்க அதிபரின் பிரதான உரையையடுத்து
ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.