கிளிநொச்சியில் பதற்றம் - காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினர்



இலங்கையின் சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியதோடு 4 பேர் இலுத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த பகுதியில் நிலவிய பதற்ற சூழலினால் A9 மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நீர்த்தாரை பிரயோகத்தை மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை