இலங்கையில் இருந்து குடும்பமொன்று தமிழகத்தில் தஞ்சம்!நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தமிழ்நாட்டின் தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.


நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் வவுனியா மாவட்டம் நெடுங்குழி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ரந்த மொத்தமாக 5 பேர் நேற்று மாலை மன்னாரில் புறப்பட்டு இன்று அதிகாலை தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இந்த பயணத்தை மேற்கொள்வதற்காக படகொன்றுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ராமேஸ்வரம் மரைன் பொலீசார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ள தமிழக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
புதியது பழையவை