செவிலியர் பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்கும் நேர்முகப்பரீட்சை இன்று இடம்பெற்வுள்ளது.
இந்த நேர்முகப்பரீட்சை மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (10-02-2024) கண்டி தாதியர் கல்லூரியில் நேர்முகப்பரீட்சை நடத்த சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சாமிக்க எச்.கமகே தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்கள்
இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் (https://www.health.gov.lk/) பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.