திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநருக்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநருக்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகருக்கும் இடையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பானது, மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இச்சந்திப்பில் திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின் போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய இந்திய பாதுகாப்பு அமைச்சின் குழுவினர் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.