மட்டக்களப்பு கடற்றொழிலாளர்களின் இறங்குதுறை பிரச்சினை




கல்லடியிலிருந்து பெரியகல்லாறு வரையிலான பகுதியில் இறங்குதுறை அமைப்பதற்குரிய சாத்திய வளங்களை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு அப்பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியிலிருந்து பெரியகல்லாறு வரையிலான பகுதியில் இயற்கையாகவே அமைந்துள்ள நீரோடையை ஒன்றிணைத்து சிறியரக மீன்பிடி இறங்குதுறை அமைப்பதற்குரிய சாத்திய வளங்களை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு நேற்று(06.02.2024) இந்த கள விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.




மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியிலிருந்து பெரியகல்லாறு வரையிலான கடற்றொழிலாளர்கள் தமக்குரிய இறங்குதுறை (துறைமுகம்) ஒன்று இன்மையால் அவர்களது மீன்பிடி படகுகளை நிறுத்த முடியாமல் பெரும் சிரமங்களை மிக நீண்டகாலமாகவிருந்து எதிர்கொண்டுவருகின்றனர்.

எனவே இவ்விடயம் குறித்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களிடம விடுத்த கோரிக்கைக்கு அமைய அதிகாரிகள் களத்திற்கு சென்றுள்ளனர்.


இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரதிநிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன், கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களம், மீன்பிடித் திணைக்களம், உள்ளிட்ட பல அதிகாரிகள் குழு அப்பகுதிக்கு விஜயம் செய்து கள நிலவரங்களைப் பார்வையிட்டு கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.


எதிர்வரும் வாரம் அப்பகுதியில் சிறியரக கடற்றொழிலாளர்களுக்குரிய இறங்குதுறை அமைப்பதற்குரிய சாத்தியவள அறிக்கைகள் தயாரிக்கப்படவுள்ளதாக அங்கு விஜயம் செய்த அதிகாரிகள் குழு தெரிவித்திருந்தது.
புதியது பழையவை