உலகின் மிக பழமையான மொழி





மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் பாதையில் மொழி ஒரு மூலக்கல்லாக செயல்படுகிிறது.

ஒருவருடன் மனிதர்கள் மேற்கொள்ளும் தொடர்பு, சுய வெளிப்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாக்க மொழி உதவுகிறது.

உலகில் மொத்தம் 6 ஆயிரம் மொழிகள் உள்ள நிலையில், சில மொழிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக உள்ளன.




எகிப்திய மொழி
ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டில் உருவாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சியின் மர்ம அரசியல்! அம்பலமாகும் உண்மைகள்
எதிர்க்கட்சியின் மர்ம அரசியல்! அம்பலமாகும் உண்மைகள்
இந்த மொழியின் முதல் வசனம் கி.மு.2690 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

எகிப்திய மொழி சுமார் 4 ஆயிரத்து 700 ஆண்டு பழமை வாய்ந்த மொழியாக காணப்படுகிறது.




சமஸ்கிருத மொழி
இதனை தொடர்ந்து, இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, உலகின் பழமையான மொழி வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

எனினும், இந்த மொழி, தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது கி.மு. ஆயிரத்து 500 ஆம் ஆண்டளவில் சமஸ்கிருத மொழி உருவாகியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மொழி தற்போது 3 ஆயிரத்து 500 வருட பழமை வாய்ந்த மொழியாக காணப்படுகிறது.


கிரேக்க மொழி
உலகின் பழமையான மொழிகளின் வரிசையில் கிரேக்கம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவில் கிரேக்க மொழி உருவாகியுள்ளது.

சமஸ்கிருதத்தை போன்று கிரேக்க மொழியும் தற்போது 3 ஆயிரத்து 500 வருட பழமை வாய்ந்த மொழியாக காணப்படுகிறது.


சீன மொழி
சீனர்கள் தற்போது பேசப்படும் சீன மொழி கி.மு.1250 ஆம் ஆண்டளவில் உருவாகியுள்ளது.

மூவாயிரத்து 300 ஆண்டுகள் பழமையான இந்த மொழி, பல ஆண்டுகளாக நடைமுறையிலேயே இருக்கும் மொழியாக கருதப்படுகிறது.

சீனாவில் தற்போது மண்டரின் மற்றும் கான்டோனீஸ் எனும் மொழிகள் பயன்படுத்தப்பட்டாலும் அதிகளவான மக்களால் சீன மொழி பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அராமிக் மொழி
அரபு மற்றும் எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென கூறப்படுகிறது.


இந்த மொழி கி.மு.1100 ஆம் ஆண்டளவில் உருவாகியுள்ளது.

அராமிக் மொழி மூவாயிரத்து 100 ஆண்டு பழமையான மொழியாக திகழ்ந்து வருகிறது.

மொழி வரிசை
இந்த நிலையில், உலகின் மிக பழமையான மொழிகளின் வரிசையில் தமிழ் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது.


தமிழ் மொழி 2 ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான மொழி என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை