மன்னார் சிறுமிக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்மன்னார் தலைமன்னாரில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியான கியானுசியாவின் படுகொலைக்கு நீதி கோரி
மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினால், காந்திபூங்கா முன்றலில் இக் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிறுமிக்கு நீதி கோரி கோசங்கள் எழுப்பப்பட்டதோடு,
நீதிக் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளையும் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை