ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கமானது ஷிகோகுவில் இன்று (26-02-2024) காலை 6.24 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.


மேலும், ஷிகோகுவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இலேசாக அதிர்ந்த போதும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை