இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பல வருட ஆசை கடலுக்குள் நிறைவேறியது!
கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகாவில் வழிபட்டதன் மூலட் தனது பல வருட ஆசை நிறைவேறியது என்று
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் துவாரகாவில் 4150 கோடி ரூபா மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டிவைத்தார்.

முன்னதாக, கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகருக்கு சென்று பூஜை செய்ய விரும்பிய பிரதமர் மோடி, நேற்று ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் படகில் அரபிக்கடலுக்குள் பயணித்தார்.

துவாரகா நகரை உருவாக்கியவராக நம்பப்படும் கடவுள் கிருஷ்ணருக்கு மயிலிறகு விருப்பமான ஒன்று, காவி உடை அணிந்து தனது கையில் மயிலறகுடன் ‛ஸ்கூபா டைவிங்’ கருவிகளை உடலில் பொருத்திக் கொண்டு பிரதமர் மோடி கடலுக்கடியில் சென்று தரிசனம் செய்தார்.

அவருக்கு பாதுகாப்பாக ஏனைய ஸ்கூபா டைவிங் வீரர்கள் உடன் சென்றனர்.

ஆழ்கடலின் தரைப்பகுதிக்குள் சென்ற பிரதமர் மோடி அங்கு தான் கொண்டு சென்ற மயிலறகை தரையில் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.

அதன்பின் தரைப்பகுதியை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி கடலில் இருந்து வெளியே வந்தார்.

இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.


புதியது பழையவை