மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முனைக்காடு களப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (19-02-2024) இடம்பெற்றுள்ளது.
இதன் போது, முற்றுகையிட்ட பொலிஸார் சுமார் 150 போத்தல்கள் கசிப்பினை கைப்பற்றியுள்ளதுடன் 350000 மில்லி மீற்றர் கோடா, உற்பத்தி உபகரணங்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இது குறித்து மேலும் தெரிய வருகையில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கமைய பொலிஸ் குழுவினர் இன்று அதிகாலை குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவரை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.