மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயம் தரமுயர்த்தப்பட்டதுமட்டக்களப்பு வேலூர் சக்தி வித்தியாலயத்தில் புதிதாக தரம் 10 மற்றும் 11ம் தரங்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு, பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தரம் ஒன்பது வரை மாத்திரமே இப் பாடசாலையில் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்று வந்தது.


பொதுமக்கள் ,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ,பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் , பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள்,
பாடசாலை முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் முயற்சியால், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் மற்றும் இராஜாங்க அமைச்சர்
சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, தரம் 10 மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு, பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.


பாடசாலை அதிபர் எஸ் பிரான்சிஸ் தலைமையில், பாடசாலை தரமுயர்த்தும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது. 

ஆன்மீக அதிதியாக சுவாமி சுராஜ் சிதானந்தா மகராஜ் கலந்துகொண்டதுடன், பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனும், கௌரவ அதிதியாக பிரதி கல்வி பணிப்பாளர் நிர்வாகம் ஷாமினி ரவிராஜூம், சிறப்பு அதிதியாக பிரதி கள்ளிப்பணிப்பாளர் ஹரணியா சுபாஸ்கரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


இப்பாடசாலையில் கல்வி பயிலும் விசேடதேவையுடைய மாணவர்களை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர், அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்குத்
தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் உட்பட பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை