நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயாருக்கு அஞ்சலி!தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் நேற்று காலமான நிலையில் இன்று அன்னாரது பூதவுடலுக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

செல்வம் அடைக்கலநாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை அவரது 84 ஆவது வயதில் நேற்று காலமானார்.
அன்னாரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அன்னாரது பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், மற்றும் அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை காலை தோட்டவெளி ஜோசப் வாஸ் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு விடத்தல் தீவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை