நிதியமைச்சில் இன்று விசேட கலந்துரையாடல்!



சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பினருக்கும், நிதி அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று நிதி அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.


இதன்போது சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில்  கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுகாதார ஊழியர்களால்,  சம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு  பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி  ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை