மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சொந்தமான, திருப்பெருந்துறை திறந்த வெளிப் பண்னை வயலில் அறுவடை நிகழ்வு இன்று(03-02-2024) இடம்பெற்றது.
காலை பூஜை வழிபாடுகளுடன் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில், அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.
14 ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை பெரும்போகச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
பொருளாதார நெருக்கடியில், சிறைக் கைதிகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், கைதிகளின் புனர்வாழ்வுச் செயற்பாடு மற்றும் நஞ்சற்ற வேளாண்மை ஆகிய விடயங்களை முக்கியப்படுத்தி, மட்டக்களப்பு சிறைச்சாலை நிர்வாகம் தமக்குச் சொந்தமான வயலில், விவசாய நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது.
நெற் பயிர்களுக்கு ஏற்பட்ட நோய்த் தாக்கத்தால், இம்முறை எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கப்பெறவில்லை என சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன்
தெரிவித்தார்.
சிறைச்சாலையின் அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்ற அறுவடை நிகழ்வில், அருட்தந்தை மகிமைதாஸ், பதில் பிரதான ஜெயிலர் ஹென்றி, சிறைச்சாலை காவலாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் புனர்வாழ்வு கைதிகள் கலந்துகொண்டனர்.