கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்பாக பாரிய போராட்டம்கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்னாள் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த போராட்டமானது இன்று(05.02.2024) கனேடிய தமிழ் காங்கிரசிற்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன் போது கருத்து வெளியிட்ட பெண், ஆயிரம் மாவீரர்களையும், மக்களையும் குற்றுயிராக இரத்தமும் சதையுமாக நாங்கள் அள்ளி கொடுத்து விட்டு, கனடா தமிழர் குறிப்பாக அடங்கி போக வேண்டும் என்று கனேடிய தமிழ் காங்கிரஸ் கூறுகின்றது.

இதனை நாங்கள் கேட்டு கொண்டு மடந்தைகளாக அடங்கி போக வேண்டுமா? உரத்து கூறுங்கள் இந்த தலைமை விலக வேண்டும். இந்த கட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டும். எங்களுக்கு இவ்வாறான தலைமை தேவையில்லை.
புதியது பழையவை