திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஷாத் நகர் பகுதியில் இன்று (12-02-2024)திங்கட்கிழமை மாலை கார் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் குறித்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை.
டயலொக் நிறுவனத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கையில் குறித்த கார் பாதையை விட்டு விலகியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.