நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் சூரியச் சிதறல்களை படம் பிடித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 'சோலார் டைனமிக்ஸ்' என்ற ஆய்வு விண்கலத்தை அனுப்பியது.
தொலைத் தொடர்பு சேவை பாதிப்பு
இந்த விண்கலமானது கடந்த 2010-ம் ஆண்டு முதல் சூரியனை ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
இந்த நிலையில், சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்பச் சிதறலை விண்கலம் தற்போது புகைப்படம் எடுத்துள்ளது.