மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கான காப்பாளர்கள் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் 24 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளின் காப்பாளர்காளப் பணியாற்றும் ஊழியர்கள், பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்புர் பிரதான புகையிரத நிலைய வளாகத்திற்கு முன்பாக இன்று தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்றையும், பாதுகாப்பற்ற புகையிரத
கடவை காப்பாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் கடமை புரியும் ஊழியர்களுக்கு மாதாந்தம் 7ஆயிரத்து 500 ரூபாவை மாதாந்த சம்பளமாக வழங்குமாறும்,
நாள் ஒன்றுக்கு எட்டு மணித்தியாலம் கடமையாற்றுவதற்கு வழங்கப்படும் 250 ரூபா என்ற கொடுப்பணவை உயர்த்துமாறும், போராட்டக்காரர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கான காப்பாளர்கள் பொலிஸ் திணைக்களத்தால் நியமிக்கப்படும் நிலையில், பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் காரணமாக பொலிஸார்,
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் கடமையாற்றி வருவதை அவதானிக்க முடிகிறது.
புதியது பழையவை