முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஸ்ணனின், ‘யாதுமானவள்’ செயலூக்க உரை



கிழக்கப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில், முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஸ்ணனின், ‘யாதுமானவள்’ செயலூக்க
உரை இன்று (23-02-2024) இடம்பெற்றது.

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம், மட்டக்களப்பு நகர் றோட்டறி கழகம், தமிழ்நாடு
விருதுநகர் றோட்டரிக் கழகம் ஆகியன இணைந்து நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இருபத்தி நான்கு மாதமாக யாதுமானவள் நிகழ்வு தேசிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் 70வது நிகழ்வு மட்டக்களப்பில்
இடம்பெற்றது.

இளம்பிள்ளை வாத நோயினை சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கு தேவையான சேவையினை றோட்டரி கழகம் மேற்கொண்டு வருகின்றது.
அதற்கு கௌரவமளிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி தலைமையில் நடைபெற்ற
நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன்,
கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உட்பட மட்டக்களப்பு றோட்டரிக் கழக தலைவர் செல்வராஜா உட்பட இலங்கை மற்றும் இந்திய
றோட்டரிக் கழக உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் என பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்வில் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகம் மற்றும் மட்டக்களப்பு நகர் றோட்டறி கழகத்தினால்
பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, அவருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
புதியது பழையவை