இலங்கையில் குவியும் வெளிநாட்டவர்கள் - வெளியேறும் இலங்கையர்கள்



நாட்டை விட்டு அதிக அளவிலான ஹோட்டல் ஊழியர்கள் வெளியேறுவதால் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களை முன்னெடுப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை முதலீட்டுச் சபை ஏற்கனவே ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்ட 2000க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நிர்வாகம் முதல் சமையல் அறைகள் வரை அனைத்து துறைகளிலும் பணி வெற்றிடங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளன.

நட்சத்திர ஹோட்டல்களில் பயிற்சி பெற்ற பலர் வெளிநாடு ஹோட்டல்களில் வேலைக்குச் செல்வதாலும், ஹோட்டல் பாடசாலை பயிற்சி பெற்ற பலர் வெளிநாட்டு ஹோட்டல்களில் வேலை தேடுவதாலும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்
ஊழியர்கள் பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான உணவு மற்றும் குளிர்பான சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நேரத்தில், நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களின் வசதிகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஹோட்டல் துறையில் உள்ள பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டுகிறது.
புதியது பழையவை