கல்முனை நன்னடத்தை பாடசாலை மாணவன் உயிரிழப்பு விவகாரம்
அம்பாறை கல்முனையில், நன்னடத்தைப் பாடசாலையில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட மேற்பார்வையாளரின் விளக்கமறியலை,
கல்முனை நீதிவான் நீதிமன்றம் நீடித்தது.

சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு, நேற்றைய தினம் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்ட நிலையிலேயே, சந்தேக நபரை பெப்ரவரி 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
புதியது பழையவை