மட்டக்களப்பு சிறைச்சாலை கைதி ஒருவர், இன்று (23-02-2024)காலை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், அவருக்கு ஏற்பட்ட அவசர நோய் நிலைமை காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.