போதை மாத்திரைகளுடன் வைத்தியர் கைது!1,600 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஜயமாலபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய வைத்தியர் ஆவார்.

கைதுசெய்யப்பட்டவர் அரச வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை