இலங்கைக்கான கனேடிய துணை தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்!




இலங்கைக்கான கனேடிய துணை தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயமானது இன்றைய தினம்(22-02-2024)  கனேடிய துணை தூதுவர் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மட்டக்களப்பில் அமைந்துள்ள கனடா - மட்டக்களப்பு நட்புறவு பண்ணைக்கு சென்று கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர்.



குறித்த விஜயத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
புதியது பழையவை