சுமந்திரன் எம்.பியின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார் - மகிந்த ராஜபக்ஸதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் நேற்று காலமான நிலையில் அவருக்கு முன்னாள் அதிபரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஸ அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் சுமந்திரனின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானார்.

முதுகுத்தண்டு சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த இரண்டு வருட காலமாக சுகயீனமாக இருந்து உயிரிழந்துள்ளார்இந்நிலையில், தெஹிவளையில் அமைந்துள்ள சுமந்திரனின் வீட்டிற்கு சென்று முன்னாள் அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச சுமந்திரனின் தாயாராருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.இதேவேளை, தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வந்துள்ளனர்.

அத்துடன் சுமந்திரனின் தந்தை யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் தாயார் குடத்தனை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை