13 ஆம் வாய்ப்பாட்டை ஏற்றுக்கொள்ள சித்தார்த்தன் எம்.பி வலியுறுத்து!




13,ஐ, விட நாம் பெரிதாக பெறுவோம் என்று சொல்வதால் படிப்படியாக எங்களுடைய இனம் அதாவது வடக்கு - கிழக்கு தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்து கொண்டு வருகிறார்கள்.                                        

இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வசதியாக கனடா விசா, லண்டன் விசா கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் வடக்கு - கிழக்கில் இருந்து ஏறக்குறைய சுமார் 20 ஆயிரம் பேர் நாட்டை விட்டு சென்றுள்ளார்கள்.

13, கிடைத்தால் கனடா, லண்டன், போகத்தேவையில்லை என்பது இவரின் நிலைப்பாடு.

வெளிநாடு இதை்தடுக்க 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று முன்தினம் (24/03/2024) இடம்பெற்ற ரெலோ மாநாட்டு நிகழ்வில்  கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அப்ப சமஷ்டித்தீர்வு பற்றி கதைக்காமல் 13பற்றி கதைத்து அதை பெறுவதே புளட்டின் நிலைப்பாடு என்பதே இவரின் கருத்து!

"இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம்” 
கடந்த 1987, ல் ஜேஆர்+ராஜீவ் கைச்சாத்திட்டு 2024, ல் 37, வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்தியா அரசு தொடர்ந்தும் அதை அமுல் படுத்த முடியாமல் மௌனம் காக்கும் போது 37, வருடங்களாக தமிழ் தலைமைகள் இந்திய அரசுக்கு கொடுத்த அழுத்தங்களை இந்திய அரசு கணக்கெடுக்கவில்லை என்பது தெரியவில்லையா?


புதியது பழையவை