உணவகத்தில் 24 கரட் தங்க பருப்பு குழம்புஉணவகம் ஒன்றில் தயாராகும் சிறப்பு பருப்பு குழம்பு குறித்த காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

டுபாயில் உள்ள பிரபல சிட்டி மொலில் இந்த சிறப்பு உணவு பரிமாறப்படுகிறது.

வித்தியாசமான உணவுகளை தயார் செய்யும் புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரால் இந்த உணவு தயாரிக்கப்படுகின்றது.


தங்க பவுடர் கலந்த கரைசல்

ரன்வீர் பிரார் நடத்தி வரும் உணவகத்தில் சிறப்பு உணவாக ‘தால் கஷ்கான்’ என்ற பெயரில் விசேஷமாக பருப்பு குழம்பை தயாரித்து வழங்குகிறார்.


இந்த பருப்பு குழம்பு ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது.


இதற்கு முக்கிய காரணம் அந்த பருப்பு கரைசலில் 24 கரட் தங்க பவுடர் கலக்கப்படுவது தான்.

இதனை ஒடர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து நெய் கலந்து பரிமாறப்படுகிறது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் இலட்சம்க்கணக்கான பார்வையாளர்கள் பார்வை இட்டுள்ளதுடன் மாறுபட்ட விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
புதியது பழையவை