காத்தான்குடியில் கைதான 30 பேரும் நீதிமன்றினால் விடுவிப்பு!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை புர்க்கான் பள்ளிவாசல் வீதியிலுள்ள பின்வளவில் சீட்டு விளையாடிய குற்றச்சாட்டில் இம்மாதம் 2ஆம் திகதி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரும் நீதவான் நீதிமன்றினால் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கானது நேற்று(26.03.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான முகைதீன் சாலி, நௌசர், நிப்ராஸ், அப்றா, றம்சியா ஆகியோர் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர்.


இந்நிலையில் சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம் எச்.எம்.ஹம்ஸா விடுவிப்பு செய்துள்ளார்.
புதியது பழையவை