தமிழர்களுக்காக உயிர் நீத்த அன்னைபூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்




தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் போது நீர் ஆகாரமின்றி தனது உயிரைத் தியாகம் செய்த அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் ஆரம்ப நாள் இன்று(19-03-2024) நினைவு கூரப்பட்டுள்ளது.

அமைதிகாக்கும் படையணி என்ற பெயரில் தமிழர் தாயகத்திற்குள் நுழைந்திருந்த இந்தியப் படையினர் மேற்கொண்ட கொடூரங்களை அடுத்து இந்தியப் படைகளை வெளியேறுமாறு வலியுறுத்தி 1988 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி கணபதிப்பிள்ளை பூபதியம்மாள் நீர் ஆகாரமின்றி போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.


இந்தப் போராட்டத்திற்கு இந்திய அரசினால் எந்தவித சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில் ஏப்ரல் 19 ஆம் திகதி அன்னை பூபதி உயிர்நீத்திருந்தார்.


இந்த நிலையில் தமிழ் மக்களுக்காக உயிரைத் தியாகம் செய்த அன்னை பூபதியின் நினைவேந்தலின் ஆரம்ப நாள் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று காலை நினைவு கூரப்பட்டது.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
புதியது பழையவை