பாதாளக் குழுக்களை சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்றையதினம் (10-03-2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், பாதாள குழுக்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் பலருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட உள்ளன.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள கும்பலைச் சேர்ந்த "மன்னா ரமேஷ்" தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து டுபாய் அரசுடன் ஆலோசிப்பதாக நம்புகின்றோம் ” என காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.