பிரித்தானியாவில் காலமானார் முன்னாள் பெண் போராளி சாருமதி!




பிரித்தானியாவில் செயற்பட்டு வரும் உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் நிறுவனர்களில் ஒருவரான சங்கீதன் என்ற தயாபரனின் மனைவி சாருமதி/றிசபனா என்பவர் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த (09-03-2024)சனிக்கிழமை அன்று பிரித்தானியா Coventry மருத்துவமனை ஒன்றில் அவர் காலமானார்.


அமரர் சாருமதி (புளோரா அன்ர நெற்) வன்னியை பிறப்பிடமாகவும், வன்னி மற்றும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கப் பெண் போராளிகளில் ஒருவரான சாருமதி அவர்கள் விடுதலைப் போராளி தயாபரன் என்ற சங்கீதன் என்ற போராளியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

தமிழீழ விடுதலைக்கு சாருமதியின் பங்களிப்பு அளப்பரியது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இடர்களை சுமந்து ஈழ விடுதலைகாக போராடிய பெண் போராளி சாருமதிக்கு ஆழ்ந்த இரங்கலை முகநூலில் தமிழ் உறவுகள் தெரிவித்து வருகின்றனர்.
புதியது பழையவை