வெல்லாவெளி பொலிஸ்பிரிவில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து- தாயும் 6 வயது மகளும் காயம்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று தும்பங்கேணி-  திக்கோடை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து இடம்பெற்றன.

இன்று(20-03-2024)பி.ப 1.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த தாயும் 6 வயது  மகளும் பிரயானம் செய்யும் போது பின்னால் வந்த கார் மோதி விபத்து இடம் பெற்றது.

பாதிக்கப்பட்ட தாயும் மகளும் காயங்களுடன் போரதீவுப்பற்று பழுகாமம் பிரதேசவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.


சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை