போரதீவுப்பற்றில் சிறுபோக நெற்பயிர்ச் செய்கை ஆரம்பக் கூட்டம்




மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்பயிர்ச் செய்கை ஆரம்பக் கூட்டம் (19-03-2024)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு போரதீவுப்பற்று கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 16736 ஏக்கர்களில் சிறுபோக நெற்பயிர்ச் செய்கை பண்ணுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறுபோக நெற்பயிர்ச் செய்கைக்கான விதை நெல் இனங்களாக BG 300, AT 307, AT308, BG 360, BG 377, BG 357, BG 356, AT 362 மற்றும் LD365 போன்ற நெல் இனங்களை விதைப்பது என இதன் போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விதைப்பற்கு (2024-04-10 )ஆம் திகதி தொடக்கம் (2024-04-25 )ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதெனவும் காப்புறுதி செய்யும் கடைசித்திகதி (2024-04-30), முதல் நீர் விநியோகம் (2024-03-25), நீர் விநியோக கடைசித்திகதி 2024.07.20, அறுவடை கொண்டு செல்லும் முதல் திகதி (2024-07-25), அறுவடை கொண்டு செல்லும் கடைசித்திகதி (2024-08-20 )கால்நடைகள் அகற்றப்படவேண்டிய திகதி (2024-03-10)கால்நடைகள் மீளக் கொண்டு வரும் திகதி (2024-08-20)எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர், கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள நீர்ப்பாசனப் பணிப்பாளர், உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், நவகிரி நீர்ப்பாசனப் பொறியியலாளர், கரடியனாறு விதை மற்றும் விதை நடுகைகள் அபிவிருத்தித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், தேசிய உரச் செயலக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர், கமநல காப்புறுதிச்சபை உதவிப்பணிப்பாளர், அரச, தனியார் வங்கி பிரதிநிதிகள் உட்பட ஏனைய திணைக்கள அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை