வவுனியா - வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்றில் இன்று (12-03-2024)வழக்கு இடம்பெற்றுவருகின்றது.
வவுனியா நீதவான் நீதிமன்றம்
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் அங்கு இருந்தவர்களை தாக்கியதுடன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
பின்பு குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கடந்த 9 ஆம் திகதி மாலை முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டமை தொடர்பில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது குறித்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன், சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரும் நீதிமன்றுக்கு சென்றுள்ளனர் என அறியமுடிகின்றது.